கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்றும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தேனி திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஜூலை 29 முதல் 31ஆம் தேதி வரை கோவை நீலகிரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது