Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (07:28 IST)
தமிழக முழுவதும் இன்றும் நாளையும் மீண்டும் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்தாலும், இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால், வெப்பநிலையும் காற்றில் ஈரப்பதமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மதிய நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில், இன்று கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும், அதேபோல் திருநெல்வேலி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments