Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை வீட்டில் சோதனை

Advertiesment
அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை வீட்டில் சோதனை
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:23 IST)
அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை 5 மணியளவுல் சோதனை செய்ய துவங்கினர். இந்த சோதனை இன்று கலை 6.30 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ஆவணங்களும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும்  ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பிரமுகர் வெற்றிவேல் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு உதவியாளராக இருந்ததாகவும் அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
 
வெற்றிவேலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபான் தீவிரவாதி ஒருவர் ஆப்கான் அதிபர் மாளிகையில் நடனம்