காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் 12ஆம் தேதி தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்பதும் அவர் கோவை மற்றும் நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த இரண்டு கூட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த இரண்டு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தை முதலில் சென்னையில் நடத்த தான் திட்டமிடப்பட்டது என்பதும் ஆனால் அண்ணாமலைக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக கோவையில் ராகுல் காந்தியை வைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வயநாடு பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ராகுல் காந்தி கோவைக்கு வருவது என்பது மிகவும் எளிது என்றும் அடுத்தடுத்த நாள்களில் கோவை திருப்பூர் பொள்ளாச்சி பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்ய இருப்பதால் கோவையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்பட்டது
அண்ணாமலையை எப்படியும் வெற்றி பெற செய்யக்கூடாது என்பது அதிமுக மட்டுமின்றி திமுகவும் குறிக்கோளுடன் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறது என்பதும் அதற்காக தான் ராகுல் காந்தி கோவை இறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.