Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் கோவிலில் ரெண்டு பேரும் சத்தியம் பண்ணுவோமா? அண்ணாமலை சவால் விட்ட சீமான்..!

Seeman

Siva

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (19:01 IST)
ராமர் கோவிலுக்கு சென்று இரண்டு பேரும் சத்தியம் செய்வோமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு கொடுக்க விடாமல் செய்தது பாஜக தான் என சீமான் கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகிறார். அதற்கு ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியும் அவர் தொடர்ந்து பாஜக மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு அவர் விடுத்த சவாலில் நானும் அண்ணாமலையும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வோம், எனது சின்னத்தை பறித்தது பாஜக தான் என்று நான் சத்தியம் செய்கிறேன், சின்னத்தை பறித்ததற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அண்ணாமலை சத்தியம் செய்வாரா என்று சவால் விட்டார்.

நான் ஐந்து வயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன் என்றும் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போதே நான் கம்யூனிஸ்ட் கொடியை பிடித்துக் கொண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றும் என்னிடம் உங்கள் வேலையை காட்ட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்!