Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடுகளை பிடிக்கப்போனால் கும்பலாக வந்து மிரட்டுகிறார்கள்... ராதாகிருஷ்ணன்

Radhakrishnan
, வியாழன், 26 அக்டோபர் 2023 (10:28 IST)
சென்னையில் திரியும் மாடுகளை பிடிக்க சென்றால் எங்களை மிரட்டுகிறார்கள் என ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மாடுகள் தெரிந்து கொண்டிருப்பதால் அந்த மாடுகள் முட்டியதால் பலர் காயம் அடைந்துள்ளனர்

அரும்பாக்கத்தில் உள்ள ஒரு சிறுமி, திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு முதியவர் ஆகியோர் மாடு முட்டியதால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தெருவில் திரியும் மாடுகளை பிடிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் மாடுகளை குழுவாக சென்று பிடிக்க சென்றால் மாடுகளின் உரிமையாளர்கள் கும்பலாக வந்து எங்களை தடுக்கிறார்கள் மேலும் மிரட்டுகிறார்கள்,இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்வது?

ரோட்டில் மாடுகள் திரிந்தால் அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாடுகள் வளர்ப்பவர்கள் ரோட்டில் திரிய வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும்  இதையும் மீறி ரோட்டில் மாடுகள் திரிந்தால் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 28ஆம் தேதி தரிசனம் ரத்து.. என்ன காரணம்?