தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் லியோ.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வரும் நிலையில், இப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கு வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விடுமுறை நாட்கள் முடிந்ததும் இப்படத்தைப் பார்க்கக யாரும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், சென்னையில் பல திரையரங்குகளில் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்ய நேரிடுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.
ஆனால் மற்ற மாவட்டங்களில் இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.