தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பேற்ற பிறகு ஈ.பி.எஸ். போட்டியிட்ட 10 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு தோல்வியே கிடைத்ததை சுட்டிக்காட்டிய அவர், 11வதாக 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வியையே மக்கள் பரிசளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பழனிசாமி பேசியதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, மத்திய அரசுக்கு நெல் கொள்முதல் ஈரப்பத அளவு குறித்து கோரிக்கை வைக்கக்கூட ஈ.பி.எஸ்ஸுக்கு துணிவில்லை என்று சாடினார்.
மேலும், அமித்ஷா தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறிவரும் நிலையில், ஈ.பி.எஸ்.சுக்கு அதிகாரம் என்ற போலி சட்டை மட்டுமே அணிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் அமைப்பதாக கூறிய மெகா கூட்டணியில் இணைய எந்த கட்சியும் தயாராக இல்லை என்றும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், அ.தி.மு.க. ஆட்சியில் மாநிலத்தின் கடன் சுமார் 500% அதிகரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.