பிரபல 'ஹார்ட் பீட்' இணைய தொடரில் நடித்துப் பிரபலமான நடிகர் ஆர்.ஜே. ராம் அவர்களுக்கு திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது.
விமானப் பொறியியல் பட்டதாரியான ராம், கலைஞர் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' தொடரில் நடித்தார்.
இந்த தொடரை அடுத்து, அவருக்குக் கிடைத்த 'ஹார்ட் பீட்' இணைய தொடரில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக யோகலட்சுமி நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஆர்.ஜே. ராமுக்கும் ரஞ்சனி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் சின்ன திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
'ஆஹா கல்யாணம்' தொடரில் ராமுடன் நடித்த நடிகை ஷில்பா உள்ளிட்டோர் திருமண வரவேற்பில் பங்கேற்றுள்ளனர். ராம் - ரஞ்சனி ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.