Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஏ.புரம் வீடுகள் இடிப்பு; தீக்குளித்த முதியவர் உயிரிழந்தார்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (08:08 IST)
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஆர்.ஏ.புரம். இந்த பகுதியில் ஏராளமான எளிய மக்கள் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் முதலாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனது வீடு இடிக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி முதியவர் ஒருவர் தீக்குளித்தார். தீயை அணைத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.. அமைச்சர் அன்பில் குறித்து அண்ணாமலை..!

எழும்பூரிலிருந்து செந்தூர், பல்லவன், குருவாயூர் ரயில்கள் பகுதியாக ரத்து..! - தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிவரம்!

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!

நாங்க போட்டது நாடகம்னா.. அதுல நடிச்ச நீங்க யாரு? - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கிடுக்குப்பிடி!

விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments