Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கலகல

Advertiesment
புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்   - தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கலகல
, திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (09:42 IST)
தினகரன் ஆதரவாளரான புகழேந்தி அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவின் ஆதிமுக மாநில செயலாளராக உள்ள புகழேந்தி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.
webdunia
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி ஈபிஎஸும், ஓபிஎஸும் ஒன்னும் அதிமுகவை காப்பாற்றுவதற்காக பதவியில் இல்லை, அவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் எங்கே வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் கட்சி நடத்தி வருகின்றனர்.
webdunia
அதிமுகவில் உள்ளவர்களை மக்கள் காமெடியன்களை போல் பார்க்கிறார்கள். 'புறா தலையன்' ஜெயக்குமார், 'பாலிவுட் ஆக்டர்' ஆர்.பி.உதயகுமார், 'சைன்டிஸ்டு' செல்லூர் ராஜூ என அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து பேசினார் புகழேந்தி.
 
தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்து ஊழல்களும் தினகரன் தலைமையிலான ஆட்சி வந்த உடனே ஒழியும் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்ததால் 4 பேரை சுட்டுக் கொன்ற நபர்