Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Advertiesment
Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 50 சதவீதம் மாணவர்களோடு சுழற்சி முறையில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டமே புதுச்சேரி பள்ளிகளிலும் உள்ளதால் புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை தொடங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரிகளை திறக்கவும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் சிறுநீரை பிடித்து பானிபூரி நீரில் கலக்கும் கடைக்காரர் - அறுவறுப்பான வீடியோ!