Publish Date: Mon, 23 Aug 2021 (09:50 IST)
Updated Date: Mon, 23 Aug 2021 (09:53 IST)
கொடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவை விவாதத்தில் கொடநாடு கொள்ளை, கொலை விவகாரம் குறித்து பேசியதை தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இன்று தொடங்கும் சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் இன்று சட்டசபை கூட்டம் பரபரப்புடன் எதிர் நோக்கப்படுகிறது.