ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றும் மக்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி முதல்வர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவை ஞாயிற்றுக்கிழமை முதலே முதல்வர் நாரயணசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வெளியேற வேண்டாம் என புதுச்சேரி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் புதுச்சேரி மக்களோ அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியே நடமாடியதாகவும், அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய போலீஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் நாராயணசாமி அரசின் உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றுபவர்களை ஒரு ஆண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “மக்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.