Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருந்து கொடுத்தது கடவுள் அல்ல மனுசன்தான்! – நட்டி மூக்கை உடைத்த ராட்சசன் இயக்குனர்!

Advertiesment
Cinema
, செவ்வாய், 24 மார்ச் 2020 (14:05 IST)
கொரோனா விவகாரத்தில் கடவுள் கைவிட்டு விட்டதாக கூறிய நடிகர் நட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராட்சசன் இயக்குனர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா குறித்து பதிவிட்டுள்ள நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் “கடவுள நூறு வருஷமா திட்டினோம்... இன்னைக்கு கடவுள் கதவை மூடிட்டாரு.... என்ன பண்ணுவோம் மனிதர்களே....” என்று கூறியுள்ளார்.

நட்டியின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் “அன்பும் அறிவியலும் மட்டும்தான் வெற்றி பெறும்! 100 வருடங்களுக்கு முன்னாடியே வந்த பல கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிவியல்தான் மருந்து கொடுத்துருக்கு. கடவுள் அல்ல!” என்று பதிலளித்துள்ளார்.

திரைத்துறையினர் இடையே நடந்துள்ள இந்த காரசார விவாதம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெப்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ 50. லட்சம் நிதி உதவி …