Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உல்லாச ஆசையில் சென்ற தொழிலதிபர்! – பணம் பறித்த கும்பல்!

Advertiesment
உல்லாச ஆசையில் சென்ற தொழிலதிபர்! – பணம் பறித்த கும்பல்!
, திங்கள், 16 டிசம்பர் 2019 (12:37 IST)
புதுச்சேரியில் மசாஜ் செண்டர் செய்த தொழிலதிபரை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள சேதுராமன் நகரை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத். இவர் ஈசிஆர் சாலையில் உள்ள மசாஜ் செண்டருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அதன் மூலம் அந்த மசாஜ் செண்டரின் உரிமையாளர் உதயக்குமார் மஞ்சுநாத்துக்கு பழக்கம் ஆகியுள்ளார்.

மஞ்சுநாத்துக்கு பெண்கள் மீது இருக்கும் விருப்பத்தை அறிந்து கொண்ட உதயகுமார் முதலியார்பேட்டையில் புதிய மசாஜ் செண்டர் தொடங்கியிருப்பதாகவும், அங்கு அழகான இளம் பெண்கள் பலர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெண்கள் மீதான விருப்பத்தால் அங்கு சென்ற மஞ்சுநாத்தை உதயகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொண்டு வந்த பணத்தை பறித்துக் கொண்டதோடு, ஆன்லைன் மூலம் அவர் வங்கி கணக்கிலிருந்தும் பணத்தை பிடுங்கியுள்ளனர்.

இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சுநாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் உதயகுமாரை தேட தொடங்கிய போலீஸார், அவர் சேலத்தில் உள்ள விடுதியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு உதயகுமார், அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்”.. ஸ்டாலின் கொந்தளிப்பு