Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வந்த போலீசார்: கைதாக மறுப்பதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (09:09 IST)
மதிமுக, அதிமுக, அமமுக, திமுக என தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்திலும் இணைந்து சேவை செய்து வந்த பழம்பெரும் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், இப்போதைக்கு திமுகவில் உள்ளார். அவர் அதிமுக, ரஜினி உள்பட அனைத்து கட்சிகளையும் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அந்த தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுவை போலீசார் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் நாஞ்சில் சம்பத் கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments