உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீரென போராட்டம் செய்ததை அடுத்து அந்த சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன என்றும் கடந்த 2 நாட்களாக அந்த சுங்கச்சாவடியில் எந்தவித கட்டணமும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் போராட்டம் செய்து வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன