Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுச்சேரியில் இன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: எதிர்த்து நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

BBC
, ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (14:05 IST)
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற இருக்கும் நிலையில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பல்வேறு ஊர்களில் ஊர்வலம் நடத்த முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்து முன்னணி அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தி நாளன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கும் , பிற அமைப்புகள் நடத்தவிருந்த பொதுக் கூட்டம், மனிதச் சங்கிலி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

இதனால் இன்று திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.

இதே வேளையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் இன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தடையின்றி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் தனியார் மண்டலத்தில் ஏற்பாடு செய்துள்ள பொது கூட்டம் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.



புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்து, கலவரத்தை ஏற்படுத்த நினைப்பதாக புதுவையில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தனர்.

புதுச்சேரி இந்த மனித சங்கிலி மதநல்லிணக்க போராட்டம் அண்ணா சிலையில் இருந்து அண்ணா சாலை, காமராஜர் சிலை வரை நடக்கிறது. இதற்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மனித சங்கிலி மதநல்லிணக்க போராட்டம் நடைபெற்ற கொண்டிருக்கும் போது அருகே காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வருகை தந்தனர். அந்த சமயத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநர் மற்றும் முதல்வரை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதால், காவல் துறையினர் போராட்ட காரர்களை அப்புறப்படுத்தினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 5 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்