Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Advertiesment
பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:54 IST)
பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது.

விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கொரொனா தொற்று நாள்தோறும் குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பட்ட்டு வரும் நிலையில் சமூபத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நேற்று தமிழக அரசு  ஆலோசனை மேற்கொண்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், முதன்மை மாவட்ட பள்ளி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த சில மணி நேரங்களாக நடந்த இந்த ஆலோசனை தற்போது முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை  வெளியிட்டுள்ளது.

அதில்,ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், அனைத்துப் பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கொரொனா அறிகுறிகள் எதேனும் தென்பட்டால் ஆசிரியர்கள்,மாணவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் விட்டமின் சி மாத்திரை நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும் எனவும், பள்ளியில் ஆசிரியர்களுக்கு 100% கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்  எனட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சியில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி: கலெக்டர் விசாரணை!