தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.