Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீர் ஆதாரங்களை நிரப்பிய பருவமழை + நிவர் புயல்!!

நீர் ஆதாரங்களை நிரப்பிய பருவமழை + நிவர் புயல்!!
, வியாழன், 26 நவம்பர் 2020 (09:15 IST)
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
   
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழையின் போது ஏரிகள் நிரம்பிய நிலையில் தற்போது நிவர் புயலால் ஏரிகள் மேலும் நிரம்பியுள்ளன. 
 
அதன்படி காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 254 ஏரிகள் 75 விழுக்காடும், 142 ஏரிகள் 50 விழுக்காடும், 241 ஏரிகள் 25 விழுக்காடும், 40 ஏரிகள் மட்டுமே 25 விழுக்காட்டிற்கும் குறைவான கொள்ளளவை எட்டியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷோ காண்பிக்க இது வடநாடு அல்ல தமிழ்நாடு... அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி!