எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக நடந்து வருவதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மத்திய அரசு ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்றும் பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதியை குறைத்து கொண்டு வருகிறது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் திமுகவை பொருத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அதேபோல் மகளிர் ரூபாய் 1000 வழங்குவதற்கான திரட்டப்பட்ட தகவல்களை ஆராயும் பணியை குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்