Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமாச்சல்பிரதேச மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

aiims
, புதன், 5 அக்டோபர் 2022 (17:41 IST)
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியில் கடந்த 2017 ஆம் ஆன்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சுமார் 247 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், 19 சிறப்பு பிரிவுகள்  17 தனிச்சிறப்புப் பிரிவுகள், 64 தீவிர சிகிச்சைப் பிரிவுகள், 750 படுக்கைகள்,  மருத்துவ சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட பல அன்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். அவருடன் பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைசர் அனுராக் தாக்குர் ஆகியோர் இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து-