Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மர்ம உறுப்பை அறுத்த சைக்கோ கொலைகாரன் கைது – மானாமதுரையில் மடக்கிய போலிஸ் !

Advertiesment
மர்ம உறுப்பை அறுத்த சைக்கோ கொலைகாரன் கைது – மானாமதுரையில் மடக்கிய போலிஸ் !
, புதன், 12 ஜூன் 2019 (10:56 IST)
வட சென்னையில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி மானாமதுரையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக போதையில் விழுந்து கிடக்கும் நபர்களை குறி வைத்து மர்ம உறுப்புகளை அறுத்து வந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி இன்று போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது.

இதையடுத்து அவரை போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை மானாமதுரை ரயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊசலாடும் இணக்கம்: அதிமுகவின் தோல்விக்கு பாஜகவே காரணமாம்...