Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்டவாளத்தில் பைக்கை நிறுத்தி ரயிலை மறித்த வாலிபர் !

Advertiesment
தண்டவாளத்தில் பைக்கை நிறுத்தி  ரயிலை மறித்த  வாலிபர் !
, ஞாயிறு, 19 மே 2019 (11:00 IST)
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று காலையில் பயணிகள் ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.ரயில் லானது சிலைமானை அடுத்த மேம்பாலத்தைக் கடந்து வந்த போது தண்டவாளத்தில் ஒரு பைக் நிற்பதைப் பார்த்து ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தினார்.
பின்னர் ரயில் ஓட்டுநரும், ரயில்வே ஊழியரும் தண்டவாளத்தில் இருந்து பைக்கை அப்புறப்படுத்திவிட்டு உடனடியாக இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 
ஆனால் சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸார் வருவதற்குள் குடிகார வாலிபர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
 
இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் குடிகார வாலிபர் மானாமதுரையை அடுத்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல்  என்பது தெரியவந்தது.
 
ரயில்வரும் நேரத்தில் ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தி ரயிலை விபத்து ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் தற்போது அவரை ரயில்வே போலீஸார் தீவிரமாகத் தேடிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்! மணிப்பூரில் ஆட்சி கவிழுமா?