Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலனை காப்பற்ற கணவரின் மர்ம உறுப்பை கடித்து துப்பிய மனைவி...

Advertiesment
கள்ளக்காதலனை காப்பற்ற கணவரின் மர்ம உறுப்பை கடித்து துப்பிய மனைவி...
, புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:22 IST)
கள்ளக்காதலனை காப்பாற்ற தனது கணவரின் ஆணுறுப்பை அவரின் மனைவி கடித்து துப்பிய விவகாரம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங் குப்பம் ஊராட்சி துரைமூலை கிராமத்தில் வசிப்பவர் செந்தாமரை (50). கூலித்தொழிலாளியான இவரின் மனைவி ஜெயந்தி(50). துரைமூலை கிராமத்தில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
 
எனவே, நேற்று இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதை காண சென்ற செந்தாமரை நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஜெயந்தியிடம் அதே பகுதியை சேர்ந்த தட்சனாமூர்த்தி(30) இருந்துள்ளார். இதைக்கண்ட கோபமடைந்த செந்தாமரை அவருடன் சண்டை போட்டுள்ளார்.
 
தனது கணவரிடமிருந்து கள்ளக்காதலனை விடுவிக்க நினைத்த ஜெயந்தி, செந்தாமரையின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். இதில் மர்ம உறுப்பு பாதி துண்டானது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தட்சனாமூர்த்தி அங்கிருந்து ஓடிவிட்டார். செந்தாமரையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதன்பின், செந்தாமரையை வேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
இதில் என்ன கொடுமை எனில், செந்தாமரையை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் வேனும் விபத்தில் சிக்கியது. இதில், காயமடைந்த செந்தாமரை மற்றும் அவரின் உறவினர்கள் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயந்தியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய்