Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலை..!

பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலை..!

Mahendran

, செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:42 IST)
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த ஏகானபுரம் என்ற பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானத்தை இயற்றியவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான நிலையத்துக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவரும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தார். 
 
இந்நிலையில், நேற்று திடீரென அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
 
ஆனால் பரந்தூர் விமான நிலையம் அமைவது காரணமாக திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரணம் அடைந்தவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 
 
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற கருத்தை போலீசார் மறுத்துள்ளனர். அவரது சொந்த குடும்பப் பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிக்கை!