கனடாவில் உள்ள இந்து கோவில்கள் தாக்கப்பட்டதற்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி இதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கனடாவில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் அளவில் இந்து மக்கள் கட்சியினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில், அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கார் சாலையில் கேட்பாறற்று இருந்தது. அதன்பிறகு, காரை போலீசார் ஓரமாக நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.