அக். முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு??

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (08:42 IST)
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அக். முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி முதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். மேலும், இந்த அறிக்கையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அக். முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பாரோ அதே போல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து முதல்வர் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments