Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்!

போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்!
, வியாழன், 27 மே 2021 (13:10 IST)

இது சம்மந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் :-

உலகம் ஒரு குடும்பம் எனும் தத்துவத்தை அடைய உறுதுணையாக இருப்பது இன்னும் மக்களை இணைப்பதிலும் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து என்றால் அந்த போக்குவரத்து சேவையை செவ்வனே செய்யும் மேற்கொள்பவர்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் காலகட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதார பணியாளர்களுக்காகவும் அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணியை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. தங்கள் உயிரை பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள் பத்திரிக்கையாளர்கள் சுகாதாரப் பணியாளர் இவர்களைப்போல் போக்குவரத்து தொழிலாளர்களும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்கப்பட்டால்தான் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்கும். மே 31 உடன் காலாவதியாக இருக்கும் மருத்துவ காப்பீட்டினை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்றும்.

பணி ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு காலப் பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒழுங்கு நடவடிக்கை நீதிமன்றம் வளர்ந்து போன்ற காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன் இல்லை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது சம்பந்தமாக அந்த அமைப்பு அரசுக்கு கடிதம் கொடுத்து உள்ளதாகவும் தெரியவருகிறது. இவர்களுடைய கோரிக்கைகளை மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது அதில் நியாயம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து அதற்கான ஆணை வெளியிடுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்மா ஷேசாத்ரி பள்ளியோடு இணைந்து எல் ஐ சி முறைகேடு செய்ததா? அடுத்தடுத்து கிளம்பும் புகார்!