Publish Date: Wed, 30 Jun 2021 (08:07 IST)
Updated Date: Wed, 30 Jun 2021 (08:27 IST)
கொரோனா கால லாக்டவுனுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்துக்குப் பின்னர் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.