Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Advertiesment
நாளை ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
, ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (09:18 IST)
நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதுடன், பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 77 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். நேற்றுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடைந்த நிலையில் பல இடங்கலில் பிரச்சாரம் கூட்டம் என ஈரோடு கிழக்கு தொகுதியே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கபப்ட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெய்யிலின் தாக்கம் இருக்கும் என்பதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 200 மீ தொலைவிற்கு எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை தாக்க பாகிஸ்தானில் பயிற்சி?? – தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் கைது!