தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்களா? வருண்காந்தி ஆவேசம்,.!
தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள் வழங்குவதாக என பாஜக எம்பி வருண்காந்தி ஆவேசமாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் இது ஒரு தொடர்கதையாக மாறிவிட்டது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் இலவச டிவி, இலவச மிக்சி, கிரைண்டர் உட்பட பல பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக லேப்டாப், டேப்லெட் ஆகியவைகளும் கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. இந்த நிலையில் இலவசங்களை எதிர்த்து ஒரு சில அரசியல்வாதிகள் குரல் கொடுத்தாலும் இலவசங்களை பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரித்து வருகின்றன என்பதும் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இலவச அறிவிப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக எம்பி வருண்காந்தி அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அளிப்பதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து அளித்து, 'தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்கள் அளிக்கும் மாநிலத்தை உருவாக்குகின்றன என்றும், எல்லா திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இலவசமாக கருத முடியாது என்றும், உதாரணமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை இலவசம் என சொல்ல முடியாது என்றும் அது, மாணவர்களின் ஆரோக்கியத்தை குறிக்கின்றது என்றும் தெரிவித்தார்.