கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரிப்பு. குணமடைந்தோர் எண்ணிக்கை 36.24 லட்சத்தில் இருந்து 37.02 லட்சமாக அதிகரிப்பு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 லிருந்து 78,586 ஆக அதிகரிப்பு.
அதேபோல இந்தியாவில் ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 78,399 பேர் குணமடைந்துள்ளனர்; 1,114 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் இதுவரை 5.62 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் ஒரே நாளில் 10.71 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதோடு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
1. போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும், நடைபயிற்சி, யோகா, சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்