Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி மறைவு: அண்ணன் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
தம்பி மறைவு: அண்ணன் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!
, சனி, 29 ஆகஸ்ட் 2020 (07:47 IST)
எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி. 
 
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று காலை தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயதான கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமான தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
எம்பி வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரரும் கங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியாவில் புதிய வைரஸ் திரள்: "'சிவகங்கை கிளஸ்டர்" குழுவுடன் ஒத்துப்போகிறதா?