Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 7 April 2025
webdunia

உதவி வேண்டுவோர் தேமுதிக கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்… பிரேமலதா அறிவிப்பு!

Advertiesment
Rainwater drains failure

vinoth

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:26 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதுவரை 20 செமீ வரை மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அதிகனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் எச்சரித்துள்ளார். அதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் உதவி வேண்டுவோர் தேமுதிக அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் “தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் தேமுதிக அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கு பொதுமக்களுக்குத் தேவையான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே மழையா? தவறான தகவல் பரப்ப வேண்டாம்..!