வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆவேசமாக தொண்டர்கள் மத்தியில் பேசி உள்ளார்
தேமுதிக கட்சி ஆரம்பித்தது முதல் விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நிலையில் இன்று கூடிய பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பிரேமலதா பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை அடுத்து ஜெயலலிதாவுக்கு அடுத்து தமிழகத்தின் அரசியல் கட்சியின் பெண் பொதுச்செயலாளர் ஆகியுள்ள பிரேமலதா தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் ஒரே பெண் பொதுச்செயலாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேமுதிக தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு எம்பிக்களை அனுப்பும் என்றும் அதேபோல் 2026 ஆம் ஆண்டு தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
நான் வெறும் பொதுச் செயலாளர் அல்ல கட்சியின் வளர்ச்சிக்காக உங்களோடு சேர்ந்து வேலை செய்ய முதல் ஆளாக நிற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் என் கண்ணை இமை பார்ப்பது போல் கேப்டனை பார்த்துக் கொள்வேன் என்றும் அவர் 100 வயது வரை வாழ்வார் என்றும் அவர் கூறினார்