Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடு திரும்பினார் விஜயகாந்த்.. தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி..!

வீடு திரும்பினார் விஜயகாந்த்.. தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி..!
, திங்கள், 11 டிசம்பர் 2023 (10:32 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் குணமாகி வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக மருத்துவமனை செய்தி வெளியிட்ட நிலையில் தேமுதிக தொண்டர்கள் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்தனர் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி  விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை வெள்ள பாதிப்பு.. அமைச்சர் உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்..!