பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர மறுப்பு !

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:39 IST)
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இராணி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.

கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி அனைத்து மா நிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

சமீபத்தில் நடந்த 4 மா நில தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது அக்கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து பிரசாஷ் கிஷோர் காங்கிரஸ் கட்சிதலைவர்களை சந்தித்து விசாரித்தார். இன்னும் சில நாட்களில் அவர்  காங்கிரஸில் இணைவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸில் சேர தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக காங்., பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

காங்கிரஸில் இணையாவிட்டாலும் ஆலோசனைகள் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர்க்க கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் கட்சி மேலிடம் இத்தகவல் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments