Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

Advertiesment
Bussy anand

Mahendran

, வியாழன், 23 அக்டோபர் 2025 (15:00 IST)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் தளத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் உயர்மட்ட நிர்வாகிகளின் செயல்பாடு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 
 
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது அதிகார மோதல்கள் மற்றும் ஈகோ சண்டைகள் காரணமாக அதிருப்தி அதிகரித்துள்ளது.
 
குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த் மீது "சாதி மற்றும் பணம் பார்த்து பதவி வழங்கியதாக" நிர்வாகிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கப்பட்டதாக புகாரளித்துள்ளதுடன், நிர்வாகிகளை அவர் மோசமாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, இந்த முக்கிய நிர்வாகிகள் நிலைமையை சமாளிக்காமல், கைதுக்கு அஞ்சி கொண்டு மறைந்துவிட்டதாக கட்சித் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெருக்கடியான நேரத்தில் கட்சியின் தலைமை மௌனம் காப்பது சரியல்ல என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இதனால் விஜய் தனது கட்சி நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!