பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சந்திக்கும் பொதுமக்கள் இரவில் மின்வெட்டு காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சில பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கொளுத்தி வருகிறது. இதனை அடுத்து கடும் அவதியில் இருக்கும் பொதுமக்கள் இரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மின்சாரத்துறை மீது அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்ட உள்ளதை அடுத்து பலர் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சார ஊழியர்கள் விடிய விடிய மின்வெட்டை சரி செய்ய பணி செய்து வந்தாலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோடை காலத்தில் இரவில் மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும் அவதிகள் இருப்பதாகவும் மின்வெட்டை தவிர்க்க மின்சார துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.