சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 109° பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு இன்னும் வெயில் வாட்டி எடுக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திர மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரி எண்ணூரில் 103 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் அதற்கு அடுத்ததாக நேற்று தான் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரை திருச்சி அருப்புக்கோட்டை ஈரோடு கடலூர் ஆகிய பகுதிகளில் 105 டிகிரி வெப்பநிலையும் நாகப்பட்டினம் ராமநாதபுரம் சேலம் பகுதிகளில் 103 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்