தென் இந்திய மாநிலங்களுக்கு கூட்டாக கிடைத்ததை விட அதிகமாக பெறும் உத்தரபிரதேசம் பெற்றுள்ளதாகவும், ஒரு மாநில் அரசுக்கு மட்டும் அதிக நிதி கொடுத்தால் நாடு எப்படி முன்னேறும்? என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
அனைத்து மாநிலங்களுக்குமான வரி பகிர்வாக ரூ.72,961 கோடியை #மோடி அரசு பகிர்ந்தளிக்கிறது. வரிகளில் தென்னிந்தியா அதிக பங்களிப்பை அளித்தாலும், தெலுங்கானா (1533), ஆந்திரா (2952), கேரளா (1404), கர்நாடகா (2660) மற்றும் தமிழ்நாடு (2976) கூட்டாக ஒன்றிய அரசிடமிருந்து பெற்றதை விட, உத்தரப் பிரதேசம் மட்டும் 13,088 கோடியை மத்திய வரிகளிலிருந்து பெறுகிறது.
தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட குறைவான பங்களிப்பை வழங்கும் ஒரு மாநிலம், அதிகமான நிதியை பெறும் போது, பாகுபாடுள்ள இந்த அமைப்புக்கு எதிராக நாம் ஒன்றாக திரள வேண்டாமா?
இதில் நிதி அமைச்சருக்கு இருக்கும் திமிரும், அகங்காரத்தையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தியாவிற்கென தனித்துவமான காலநிலை மாதிரிகளை செய்வதற்கு வழியில்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளை வெள்ளத்தில் மிதக்கவிட்டு, மசூதிகளை இடித்து கோயில்கள், தியான மண்டபங்கள் கட்டுவதற்கு செலவு செய்யும் ஒரு மாநில் அரசுக்கு அதிக நிதியை தூக்கி கொடுத்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்.