பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதுபற்றிய தகவல் வெளியாகிறது.
இம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் BC (பிற்படுத்தப்பட்டோர் -22.13சதவீதமும், EBC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) 36.01 சதவீதமும், SC (பட்டியலினத்தவர்-19.65 சதவீதமும், ST( பழங்குடியினர்)-1.69 சதவீதமும், FC- முற்பட்ட பிரிவினர் 15.52 சதவீதமும் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இது 90 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு என கூறப்படுகிறது