Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடி மகன் மீதான குற்றச்சாட்டு: ஜனவரி 4ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை..!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (19:07 IST)
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது மகன் கௌதம சிகாமணி மீதான குற்றச்சாட்டுக்கு 90 பக்க குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த விசாரணை ஜனவரி 4ஆம் தேதி செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கௌதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  
 
இந்த வழக்கு சென்னை 12வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆறு பேருக்கும் குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதாகவும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த போது கௌதம சிகாமணி  நேரில் ஆஜராகவில்லை என்றும் அவரது தரப்பில் வைத்த வாதத்தில் அடுத்த மாதம் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளனர். 
 
இதனை அடுத்து ஜனவரி 4-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments