Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (19:02 IST)
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஓட்டி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அடுத்தடுத்து வருவதை அடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பயணிகளின் வசதியை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு இதோ:
 
டிசம்பர் 23 மற்றும் 30ம் தேதி தாம்பரம் -மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். 
 
தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, சொரனூர் மற்றும் திரூரில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு தெரிவித்துள்ளது.
 
 அதேபோல் தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு டிசம்பர் 23 மற்றும் 30ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 20 மணிக்கு கிளம்பும். அதேபோல் மங்களூரில் இருந்து டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

அடுத்த கட்டுரையில்
Show comments