தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பொன்முடி சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது அவர் மேல்முறையீடு குறித்து பேசி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான தண்டனை குறித்து அறிவிப்பு வெளியான பின் முதல் சந்திப்பு இது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிந்தது. அதேபோல் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.