வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை குறித்த விவரங்கள் நாளை வெளியாக உள்ளன. இந்த நிலையில் அமைச்சர் பதவியை பொன்முடி ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால தீர்ப்புக்கு தடை வாங்கவும் சட்ட வல்லுனர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.