Publish Date: Wed, 20 Dec 2023 (10:37 IST)
Updated Date: Wed, 20 Dec 2023 (10:38 IST)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் மீட்பு படையினர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஏரல் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கி கொண்ட நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடினர். 3 நாட்களுக்கு பிறகு தற்போது தான் அவர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு அமைச்சரே மூன்று நாட்கள் தனது வீட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை தற்போது தான் மீட்பு படையினர் மீட்டு உள்ளனர் என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிவதாக கூறப்படுகிறது.